Home One Line P1 ஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை!

ஜிஆர்எஸ் வெற்றி பெற்றது உண்மையில்லை!

754
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: வாரிசான் பிளாஸ் டாராவ் வேட்பாளர் அசார் மாதுசின், மாநில தேர்தல்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளுக்காக காத்திருக்க சபா மக்களைக் கேட்டுக் கொண்டார்.

அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின் மூலம் வென்றதாக கூறும் ஜிஆர்எசின் கூற்று “ஒரு பொய்” என்று அவர் கூறினார்.

“அவர்கள் எப்போதும் இப்படித்தான். அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு (வெற்றியை) அறிவிப்பார்கள். அதிகாரப்பூர்வ முடிவுகளுக்காக நாங்கள் காத்திருப்போம். ” என்று அவர் இன்று கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்), வாரிசான் பிளாசிடமிருந்து சபா மாநில ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக, பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் இன்று இரவு அறிவித்தார்.

தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ் கூட்டணி புதிய 73 தொகுதிகளைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில் குறுகிய பெரும்பான்மையான 37 தொகுதிகளைக் கடந்துவிட்டது என்று அவர் கூறினார்.

“அதிகாரப்பூர்வமற்ற முறையில் நாங்கள் மாநிலத்தை கைப்பற்றப் போகிறோம். ஆனால், சில நிமிடங்கள் காத்திருக்கவும். எல்லோரும் முதலில் உறுதி செய்வதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். பின்னர் நாங்கள் ஓர் அறிவிப்பை வெளியிடுவோம் ”என்று அவர் இன்று இரவு தேசிய கூட்டணி தேர்தல் தலைமையகத்தில் கூறினார்.

தற்போதைய நிலவரப்படி வாரிசான் பிளாஸ் 26 தொகுதிகளிலும், தேசிய கூட்டணி, தேசிய முன்னணி 36 தொகுதிகளிலும், சுயேச்சை 2 தொகுதிகள், உஸ்னோ ஒரு தொகுதியிலும் முன்னணியில் உள்ளனர்.