Home One Line P1 சபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி

சபா நட்சத்திரத் தொகுதிகள் : தம்புனான் : ஜெப்ரி கித்திங்கான் வெற்றி

565
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : ஸ்டார் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் ஜெப்ரி கித்திங்கான் தம்புனான் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்கு 8,691 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பார்ட்டி பெர்த்துபாஹான் கினபாலு புரோக்ரெசிவ் பெர்சாத்து கட்சியின் லாரண்டியஸ் நயான் அம்பு 1,899 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதைத் தொடர்ந்து 6,792 வாக்குகள் பெரும்பான்மையில் ஜெப்ரி கித்திங்கான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் சில நூறு வாக்குகளே பெற்றனர்.

#TamilSchoolmychoice

தம்புனான் தொகுதி நீண்ட காலமாக ஜெப்ரி கித்திங்கானின் அண்ணனும் பிபிஎஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஜோசப் பைரின் கித்திங்கான் வெற்றி பெற்று வந்த தொகுதியாகும்.

தம்புனான் தொகுதி கெனிங்காவ் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதியாகும். கெனிங்காவ் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினராகவும் ஜெப்ரி கித்திங்கான் 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

மலேசியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தம்புனான் தொகுதியின் அதிகாரபூர்வ முடிவுகள் பின்வருமாறு:

Dimenangi Oleh:
DATUK DR. JEFFREY G. KITINGAN
PARTI PERIKATAN NASIONAL
Jumlah Undi: 8,691
Majoriti : 6,792

Telah Menewaskan:
LAURENTIUS NAYAN AMBU
PARTI PERTUBUHAN KINABALU PROGRESIF BERSATU
Jumlah Undi: 1,899

Telah Hilang Diposit:
SILVERIUS BRUNO
PARTI BERSATU SABAH
Jumlah Undi: 439

Telah Hilang Diposit:
DAMIAN MARCUS PODTUNG
PARTI CINTA SABAH
Jumlah Undi: 326

Telah Hilang Diposit:
NORDIN BIN JAINI @ ZAINI
PARTI GAGASAN RAKYAT SABAH
Jumlah Undi: 140

Telah Hilang Diposit:
JIMMY PALIKAT
BEBAS
Jumlah Undi: 60