Home One Line P1 தேசியக் கூட்டணி உடையுமா? ஆட்சி அமைக்குமா?

தேசியக் கூட்டணி உடையுமா? ஆட்சி அமைக்குமா?

604
0
SHARE
Ad

கோத்தாகினபாலு : அதிகாரபூர்வமற்ற முடிவுகளின்படி, சபா சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மொகிதின் யாசின் முன்மொழிந்த ஜிஆர்எஸ் எனப்படும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றி அடுத்த ஆட்சி அமைக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இன்னும் முழுமையான இறுதி நிலவர முடிவுகள் வெளியிடப்படவில்லை.

வாரிசான் பிளஸ் கூட்டணி இதுவரையில் 25 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. ஜிஆர்எஸ் கூட்டணி 37 தொகுதிகளைக் கைப்பற்றியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

நான்கு தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களாக முன்னணி வகிக்கின்றனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஜிஆர்எஸ் கூட்டணித் தலைவர்கள் ஒருமித்த கருத்துடன் அடுத்த முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பார்களா அல்லது அந்தத் தேர்வில் முரண்பட்டு மோதிக் கொள்வார்களா என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது.

அவ்வாறு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டால் சுயேச்சை வேட்பாளர்கள் அதில் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.

அன்வார் இப்ராகிம் அடுத்த மத்திய அரசாங்க ஆட்சியை அமைத்து பிரதமராகத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அம்னோவும், மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சியும் இணக்கத்துடன் செயல்படுவார்களா அல்லது வேறு வேறு திசைகளில் பிரிந்து செல்வார்களா என்பதை அறிய அரசியல் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.