Home One Line P1 சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -20; தேசியக் கூட்டணி – 37;...

சபா முடிவுகள் : 73 தொகுதிகள் : வாரிசான் -20; தேசியக் கூட்டணி – 37; மற்றவை – 4

500
0
SHARE
Ad

கோத்தா கினபாலு :(இரவு 9.15 மணி நிலவரம்)

அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி சபா தேர்தலில் 37 இடங்களை வென்று தேசிய முன்னணி, தேசிய கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றனர்.

வாரிசான் பிளாஸ் 20 தொகுதிகளையும், உஸ்னோ ஒன்று, சுயேச்சைகள் மூன்று தொகுதிகளையும் வென்றுள்ளன.

தேசிய முன்னணி, பெர்சாத்து உள்ளிட்ட தேசியக் கூட்டணி 37 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றன.

#TamilSchoolmychoice

வாரிசான் தனியாக 13 தொகுதிகளில் முன்னணியில் இருக்க, நான்கு தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுயாங், லிகாஸ், ஸ்ரீ தன்சோங் மற்றும் எலோபுரா ஆகிய தொகுதிகளில் அது வெற்றிப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ஜசெக கட்சியைச் சேர்ந்தவர்கள். ஜசெக, 6 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது (வெற்றிப் பெற்ற தொகுதிகள் உட்பட) . மேலும், பிகேஆர் கட்சி ஒரு தொகுதியில் முன்னணியில் உள்ளது.

தேசியக் கூட்டணி சார்பில் அம்னோ 15 தொகுதிகளில் முன்னணி வகிக்க, பெர்சாத்து 10 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. முதலாக பெர்சாத்து அம்னோவைக் காட்டிலும் முன்னணியில் இருந்தது, ஆயினும், தற்போது, 15 தொகுதிகளில் அது பெர்சாத்துவைக் காட்டிலும் முன்னணியில் உள்ளது.

ஸ்டார் கட்சி 6 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இதுவும் தேசியக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சியாகும்.

பிபிஎஸ் 6 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. இதுவும் தேசியக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சியாகும்.

சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஒரு தொகுதியில் முன்னணியில் உள்ளார்.

இறுதி நிலவரங்கள் அதிகாரபூர்வமாக இரவு 10.00 மணிக்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)