Home One Line P1 புதிய சபா முதலமைச்சர் செப்டம்பர் 29 பதவி ஏற்பார்

புதிய சபா முதலமைச்சர் செப்டம்பர் 29 பதவி ஏற்பார்

561
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா மாநில புதிய முதலமைச்சர் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சபா மாநில ஆளுநர் மாளிகையில் பதவி உறுதிமொழி எடுப்பார்

ஆயினும், யார் முதலமைச்சராக பதவி உறுதிமொழி எடுப்பார் என்ற விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில் உள்ளது.

” முதல்வரின் பதவியேற்பு விழா செப்டம்பர் 29 அன்று காலை 10.30 மணிக்கு சபா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ” என்று சபா மாநில தகவல் துறை ஊடக பிரிவு இன்று ஊடகங்களுக்கு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

அந்த அறிக்கை, மா நில அரண்மனை அறிக்கையை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற விவரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதனிடையே, சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தலில், 38 தொகுதிகளை ஜிஆர்எஸ் என்னும் காபுங்கான் ராயாட் சபா கூட்டணி பெற்றது. ஆயினும், அக்கூட்டணி 41 வேட்பாளர்களுடன் ஆட்சி அமைக்கும் என்று அது குறிப்பிட்டிருந்தது.

ஷாபி அப்டால் தலைமையிலான வாரிசான் பிளாஸ் கூட்டணி 32 தொகுதிகளை பெற்றது. எஞ்சிய 3 தொகுதிகளை சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர்.

மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி 24 தொகுதிகளை வென்றது.

இதில் பெர்சாத்து கட்சி கட்சி 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஸ்டார் கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆக தேசியக் கூட்டணி சின்னத்தில் வெற்றி காணப்பட்ட தொகுதிகள் 17 ஆகும்.

தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிட்ட பிபிஎஸ் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தக் கட்சியும் தேசியக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது. ஆக மொத்தம் 24 தொகுதிகளை தேசியக் கூட்டணி கொண்டிருக்கிறது.

தேசியக் கூட்டணியில் இணைந்திருக்கும் ஸ்டார், பிபிஎஸ் இரண்டும் அம்னோவுடன் ஒத்துப் போகாத கட்சிகள்.

தேசிய கூட்டணி பக்கம் 24 தொகுதிகள் மட்டுமே இருப்பதால் தனித்து ஆட்சி அமைக்க முடியாது.

இந்நிலையில் தேசிய முன்னணி கூட்டணி 14 தொகுதிகளை வென்றது. இந்த 14 தொகுதிகளையும் அம்னோ மட்டுமே வென்றது.

இப்போது அம்னோ- தேசியக் கூட்டணியின் முதல் அமைச்சர் யார் என்ற ஊகங்கள் தீவிரமாக எழுந்துள்ளது.