வாஷிங்டன்: கொவிட்19 தொற்றின் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, இன்று உலகளவில் 1,000,555 பேர் இந்நோயால் மரணமுற்றுள்ளனர். உலகளவில் 33,273,720 சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன, மேலும் 23,056,480 பேர் இதிலிருந்து மீட்கப்பட்டுள்ளர்.
உலக சுகாதார நிறுவனம் மார்ச் 11 அன்று கொவிட்19 தொற்றை, ஒரு தொற்றுநோயாக அறிவித்தது.
இதனிடையே, இந்தியாவில் தொற்று எண்ணிக்கை திங்களன்று 6 மில்லியனைக் கடந்தது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி 6.1 மில்லியன் பேர் இந்த தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இன்னும் சில வாரங்களில் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக, அமெரிக்காவை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.