Home One Line P1 ஹாஜிஜி நூர் சபா முதலமைச்சராக பதவியேற்றார்

ஹாஜிஜி நூர் சபா முதலமைச்சராக பதவியேற்றார்

556
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா தேசிய கூட்டணி தலைவர் ஹாஜிஜி நூர் இன்று காலை மாநிலத்தின் 16- வது முதல்வராக பதவியேற்றார்.

65 வயதான ஹாஜிஜி, ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஜூஹார் மஹிருடின் முன்னிலையில் பதவியேற்றார்.

ஹாஜிஜிக்கு சபா தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின், ஸ்டார் தலைவர் ஜெப்ரி கிதிங்கான் மற்றும் பிபிஎஸ் துணைத் தலைவர் ஜோசிம் குன்சலாம் ஆகிய மூன்று பிரதிநிதிகள் உதவுவார்கள்.

#TamilSchoolmychoice

வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சராக புங் மொக்தார் பணியாற்றுவார். கிதிங்கான், வேளாண்மை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும், ஜோசிம் சபா தொழில்துறை மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்படுவார்.

தேசிய கூட்டணி, தேசிய முன்னணி இடையே யார் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்ற போட்டியில், நேற்று ஹாஜிஜி முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது.