Home One Line P1 ஆணையை மீட்டெடுக்கும் நடவடிக்கை, நீதிக்கான போராட்டத்திற்கு ஏற்ப இருக்கும்

ஆணையை மீட்டெடுக்கும் நடவடிக்கை, நீதிக்கான போராட்டத்திற்கு ஏற்ப இருக்கும்

602
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களின் ஆணையை மீட்டெடுக்கும் முயற்சியில், நீதியை நிலைநிறுத்துவதற்கான போராட்டம் , ஊழலை ஒழித்தல் மற்றும் நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களை சரிசெய்தல் ஆகியவற்றில் சமரசம் செய்யக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர் மன்றம் வலியுறுத்தியது.

நம்பிக்கைக் கூட்டணி பொதுச் செயலாளர் மன்றம் இன்று ஊடகங்களுக்கு ஒரு கூட்டு அறிக்கையில் இதனை தெரிவித்தனர்.

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் இந்த விஷயம் அடையப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“கூட்டத்தில், சபா மாநில தேர்தலின் முடிவுகள், மக்கள் ஆணையை மீண்டும் திருப்பித் தர மத்திய கூட்டரசு முயற்சிகள் உள்ளிட்ட பல விஷயங்களையும் மன்றம் விவாதித்தது,” என்று அது கூறியது.

இதற்கிடையில், நேற்று பிற்பகலில் பிகேஆர் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நாட்டின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆயினும், நேற்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அன்வார், இது சாதாரண மாதாந்திர கூட்டம் என்று வெறுமனே விவரித்தார்.

கூட்டத்தின் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, அமானா தலைவர் முகமட் சாபு உட்பட பல மூத்த நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் பிகேஆர் தலைமையகத்தை விட்டு வெளியேறத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட அன்வார், “இன்று பிற்பகல் நம்பிக்கைக் கூட்டணி தலைவர் மன்றத்தின் மாதாந்திர கூட்டத்திற்கு தலைமை தாங்கினேன்.

“நாட்டின் தற்போதைய விவகாரங்கள் மற்றும் மக்கள் ஆணையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன,” என்று குறிப்பிட்டிருந்தார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக அன்வார் அறிவித்த பின்னர் நடக்கும் முதல் நம்பிக்கைக் கூட்டணி சந்திப்பு இதுவாகும்.

கடந்த செப்டம்பர் 23 அன்று தமக்கு வலுவான பெரும்பான்மை இருப்பதாக அன்வார் கூறியிருந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியின் ஆதரவை முதலில் மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடினிடம் ஒப்படைப்பது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

“ஆதரவு வலுவானது மற்றும் உறுதியானது. நான்கு, ஐந்து அல்லது ஆறு அல்ல, ஆனால் அதிகமான பெரும்பான்மை” என்று அவர் கூறியிருந்தார்.