Home One Line P1 புங் மொக்தார் பொதுப்பணித் துறைக்கு மாற்றப்பட்டார்

புங் மொக்தார் பொதுப்பணித் துறைக்கு மாற்றப்பட்டார்

584
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின், ஊராட்சி அமைச்சு பதவியிலிருந்து, பொதுப்பணித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அறிவித்துள்ளார்.

அம்னோ தலைவரின் இலாகாவை பெர்சாத்து துணைத் தலைவரான மசிடி மஞ்சுனிடம் ஒப்படைத்தார்.

இதற்கிடையில், நிதி மற்றும் பொருளாதாரத்தில் அனுபவம் இருப்பதால், மசிடி நிதி இலாகாவில் தனது துணைவராக இருப்பார் என்றும் ஹாஜிஜி அறிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, இன்றைய பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு புங் மொகதார், மாநில துணை முதலைச்சராகவும், ஊராட்சி அமைச்சுக்கு பொருப்பாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.