கோத்தா கினபாலு: சபாவில் புதிதாக நியமிக்கப்பட்ட துணை முதல்வர் ஜெப்ரி கபரி கித்திங்கான் மத்திய அரசின் சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
சின் சியூ டெய்லி செய்தித்தாளின்படி, கித்திங்கான், பிரதமர் மொகிதின் யாசினுக்கு இன்று பதவி விலகுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்ததாகக் கூறியது.
72 வயதான கித்திங்கான் இன்று காலை கோத்தா கினபாலுவில் சபா துணை முதல்வராக நியமிக்கப்பட்டார்.
இன்று நியமிக்கப்பட்ட மூன்று துணை முதல்வர்களில் இவரும் ஒருவர். அவரைத் தவிர, புங் மொக்தார் ராடின் மற்றும் ஜோசிம் குன்சலாம் ஆகியோரும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர்.