Home One Line P1 தீபகற்பத்தில் பதிவாகும் சம்பவங்களில் பாதி சபாவிலிருந்து வந்தவை

தீபகற்பத்தில் பதிவாகும் சம்பவங்களில் பாதி சபாவிலிருந்து வந்தவை

539
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, சபாவிற்கு வெளியே பதிவு செய்யப்பட்ட கொவிட்19 சம்பவங்களில் பாதி அம்மாநிலத்தில் இருந்து பரவியதாகும்.

சபாவில் கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்ததையும், சமீபத்திய சபா மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து மாநிலத்திற்கான பயணங்களின் அதிகரிப்புக் காரணமாகவும் இந்த தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

எண்ணிக்கையின் அடிப்படையில், செப்டம்பர் 20 முதல் தீபகற்பத்தில், சபாவிலிருந்து 142 கொவிட்19 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் தினசரி செய்தியாளர் சந்திப்பின்படி, மொத்த சம்பவங்களில் 94 உள்ளூர் தொற்றுகள், அவற்றில் 49 சபாவுக்கு பயணம் செய்தது தொடர்பானவையாகும்.

நேற்றைய நிலவரப்படி, 115 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 112 சம்பவங்கள் உள்ளூர் தொற்றுகளாகும். மேலும், 3 தொற்றுகள் இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

நேற்று பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் சபாவில் 98 சம்பவங்கள், சிலாங்கூர் (11 சம்பவங்கள்), திரெங்கானு (1), கெடா (1) சம்பவங்கள் பதிவாகின. உள்ளூர் சம்பவங்களில் 11 சபாவுக்கு பயணம் செய்த வரலாறு உள்ளது.

இதனால், நாட்டில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 11,034- ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியிருந்தார்.

1,011 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் என்மர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.