புது டில்லி: இந்தியாவின் கொவிட்19 எண்ணிக்கை 6.1 மில்லியைத் தாண்டியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 70,589 புதிய சம்பவங்கள் மற்றும் 776 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட மிகக் குறைவான இறப்பு சம்பவங்களாக இது உள்ளது.
947,576 பேர் இன்னமும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 5,101,398 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்தமாக 96,318 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக , சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய புதுப்பிப்பு காட்டுகிறது.
கொவிட்19 காரணமாக பல திட்டங்களின் உதவிக் காலம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று நிதி விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.