Home One Line P1 அரச குடும்பத்திற்கு சேவையாற்றிய 10 செவிலியர்களுக்கு மைவி கார்கள் பரிசாக வழங்கப்பட்டன

அரச குடும்பத்திற்கு சேவையாற்றிய 10 செவிலியர்களுக்கு மைவி கார்கள் பரிசாக வழங்கப்பட்டன

802
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்காண்டார் இன்று இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் பணிபுரியும் 10 செவிலியர்களுக்கு பெரோடுவா மைவி கார்களை வழங்கினார்.

தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் ஒரு பதிவில், தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் அவர்கள் செய்த பங்களிப்புகள் மற்றும் சேவைகளுக்கான பாராட்டுப் பரிசுகளை வழங்குகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

செவிலியர் மேற்பார்வையாளர், மேட்ரான் ரோக்கியா சாமின், 2006 முதல் மருத்துவமனையில் அரச குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டவர். சுல்தானின் பரிசுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

லார்கினில் காசாவாரி மோட்டோர்ஸ் செண்டெரியான் பெர்ஹாடில் நடைபெற்ற பரிசளிக்கும் நிகழ்ச்சியில், இந்த கார்களை அதன் இயக்குனர் முகமட் பாமி ஹசான் செவிலியர்களுக்கு வழங்கினார்.