கோலாலம்பூர்: இன்று 101 புதிய கொவிட் 19 நோய்த்தொற்றுகள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 97 உள்ளூர் பரவல்கள் ஆகும். நான்கு சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்களாகும்.
நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,135-ஆக உயர்ந்துள்ளது.
சபாவில் 73 தொற்றுகள் பதிவாகி உள்ள நிலையில், சிலாங்கூரில் 15 தொற்றுகள் பதிவாகி உள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த சில மாதங்களைக் காட்டிலும் அதிகமாகும்.
நான்கு புதிய தொற்றுக் குழுக்கள் கண்டறியப்பட்டன. இரண்டு சபாவிலும், ஒன்று சிலாங்கூரிலும், மற்றொன்று ஜோகூரிலும் கண்டறியப்பட்டுள்ளன.
இன்று 50 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 9,939 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
தற்போது, 1,062 பேர் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 13 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 5 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.