Home One Line P1 டிபிகேஎல்: வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை செயலிகள் மூலம் செலுத்தலாம்

டிபிகேஎல்: வாகன நிறுத்துமிடக் கட்டணங்களை செயலிகள் மூலம் செலுத்தலாம்

684
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) இன்று வியாழக்கிழமை முதல் நகரத்தில் வாகனம் நிறுத்துமிடக் கட்டணம் செலுத்துவதற்கு புதிய முறையை பின்பற்றும்.

வாகனம் நிறுத்துமிடக் கட்டணம் செலுத்தும் இயந்திரங்களின் பயன்பாட்டை மாற்றுவதற்காக கைப்பேசி பயன்பாடுகள் மற்றும் மின்-பணப்பைகள், அதாவது ஈசெட் ஸ்மார்ட் பார்க் (EZ Smart Park), ப்ளெக்ஸிபார்க்கிங் (Flexiparking) , விலாயா பார்க்கிங் (Wilayah Parking) அல்லது எம்-கேஷ் (M-Cash) மூலம் வாகன நிறுத்துமிடம்  கட்டணம் செலுத்தப்படும் என்று டிபிகேஎல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயனர்களுக்கு கூடுதல் கட்டண விருப்பங்களை வழங்க பூஸ்ட் (Boost) மற்றும் டச் என் கோ (Touch n Go) வழியாக வாகன நிறுத்துமிடக் கட்டணத்தை செயல்படுத்த டிபிகேஎல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“இப்போதைக்கு, கைப்பேசி பயன்பாடுகள் மற்றும் மின்-பணப்பைகளில் வாகன நிறுத்தம் செய்வதற்கான தினசரி மற்றும் மாதாந்திர அனுமதிகள் இன்னும் கிடைக்கவில்லை. கணினி சேவைகள் மேம்படுத்திய பின்பு இந்த வசதி செயல்படுத்தப்படும்.