Home One Line P1 கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைவராக மகாதி சே ங்கா நியமனம்

கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத் தலைவராக மகாதி சே ங்கா நியமனம்

871
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) முன்னாள் நிர்வாக இயக்குனர் மகாதி சே ங்கா புதிய மா நகராட்சி மன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று மகாதியின் நியமனத்தை அறிவித்த கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா, இந்த நியமனம் பிரதமர், மாமன்னரின் ஒப்புதலைப் பெற்றதாகக் கூறினார்.

புதிய மாநகராட்சி மன்றத் தலைவர், 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி பொறுப்பேற்ற முன்னாள் சுபாங் ஜெயா நகராட்சி மன்றத் தலைவர் நோர் ஹிஷாம் அகமட் டாலானிடமிருந்து பொறுப்புகளைப் பெறுவார்.

#TamilSchoolmychoice

நோர் ஹிஷாமின் நியமனம் அக்டோபர் 2- ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது.

நிர்வாக இயக்குனராக (திட்டமிடல்) பதவியேற்பதற்கு முன்னர், 1983-இல் நகரம் மற்றும் நாட்டுத் திட்டமிடல் அதிகாரியாக மஹாதி டிபிகேஎல்- இல் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் என்று அனுவார் கூறினார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓய்வு பெற்றார்.

“டிபிகேஎல்லில் முப்பத்தாறு ஆண்டு சேவை அவருக்கு அனுபவம், திறன் மற்றும் நகர நிர்வாகத்தில் அனுபவம் மற்றும் கோலாலம்பூர் திட்டமிடல் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது நியமனம் பயனளிக்கும்” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நோர் ஹிஷாமின் சேவைக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.