Home One Line P1 கொவிட்19: புதிதாக 260 தொற்றுகள் பதிவு

கொவிட்19: புதிதாக 260 தொற்றுகள் பதிவு

778
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று மதியம் 12 மணி வரையில் 260 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். ஒற்றை இறக்குமதி சம்பவத்துடன், 259 உள்ளூர் தொற்றுகள் பதிவாகி உள்ளன.

இந்த புதியத் தொற்று எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்திலிருந்து மிக உயர்ந்ததாகும்.

சபா தொடர்ந்து 118 புதிய நோய்த்தொற்றுகளுடன் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளைப் பதிவுசெய்துள்ளது. கெடாவில் 98 சம்பவங்கள், கோலாலம்பூர் (14 சம்பவங்கள்) மற்றும் சிலாங்கூர் (13 சம்பவங்கள்) பதிவு செய்யப்பட்டன.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், மொத்தம் 31 உள்ளூர் தொற்றுச் சம்பவங்கள் சபாவுக்குச் சென்றவர்கள் சம்பந்தப்பட்டவையாகும். இதனால், நாட்டில் பதிவான மொத்த தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 11,484-ஆக உயர்ந்தது.

இன்று 47 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையிலும், 10,014 பேர் குணமடைந்துள்ளனர். 1,334 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் மூவருக்கு சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.

எனினும் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் மரணமடையவில்லை. மரண எண்ணிக்கை 136 ஆக தொடர்ந்து இருந்து வருகிறது.