கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கும், மன்னிப்பு வழங்கப்படுவதற்கும் தாம் ஏற்பாடு செய்திருந்தாலும், அவர் தம்மை ஆதரிக்கவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
“அவரது விடுதலை, அரச மன்னிப்புக்கு நான் ஏற்பாடு செய்தேன். அவர் என்னை ஆதரிக்க விரும்பவில்லை.
“அவர் அனைவரையும் பார்க்கத் தொடங்கினார், சுல்தான்களைச் சந்திக்கவும், வெளிநாட்டினரைச் சந்திக்கவும், செய்தார். என்னை ஆதரிக்கவில்லை. ஆனால் அவர் என்னை விமர்சிக்கிறார்” என்று துன் மகாதீர் நேர்காணல் ஒன்றில் கூறினார்.
மகாதீர் 1990- களில் இருந்து அன்வாருடன் விலகி இருந்தார். ஆனால், 2018 தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியோடு நட்பாக மாறினார். பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின்போது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக “நம்பிக்கைக் கூட்டணி வெற்றி பெற்றால் அன்வாருக்கு அரச மன்னிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்” என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது.
நம்பிக்கைக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மகாதீர் அன்வாருக்கு அரச மன்னிப்பு வழங்குவதன் மூலம் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.
அன்வாரும் நாடாளுமன்றத்திற்குத் திரும்பினார். பிரதமரை மாற்றுவதற்கான திட்டத்தின் மீதான அழுத்தம் காரணமாக அவர்களின் உறவு மீண்டும் பிளவுப்பட்டது.