Home One Line P1 “விஸ்மா துன் சாமிவேலு” திறப்பு விழா (படக் காட்சிகள்)

“விஸ்மா துன் சாமிவேலு” திறப்பு விழா (படக் காட்சிகள்)

1154
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 1977 ஆம் ஆண்டு, துன் ச.சாமிவேலு மஇகாவின் துணைத் தலைவராக இருந்தபோது அவரால் தோற்றுவிக்கப்பட்ட கூட்டுறவு அமைப்பு “தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகம்”.

நீண்ட காலமாக அந்தக் கூட்டுறவுக் கழகத்தை துன் சாமிவேலு தலைமையேற்று நடத்தி வந்தார். அவருக்குப் பின்னர் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தற்போது தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவுக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

தனது தலைமைத்துவத்தின் முதல் கட்ட முக்கியப் பணியாக கூட்டுறவுக் கழகத்துக்கென சொந்தக் கட்டடம் ஒன்றை தலைநகர் ஜாலான் பகாங் வளாகத்தில் வாங்கி அதற்கு “விஸ்மா துன் சாமிவேலு” எனப் பெயரும் சூட்டியுள்ளார் சரவணன்.

#TamilSchoolmychoice

“விஸ்மா துன் சாமிவேலு” கட்டடத்தின் திறப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்தேறியது.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றி அந்தக் கட்டடத்தை அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். அந்த திறப்பு விழாவில் துன் சாமிவேலுவும் கலந்து சிறப்பித்தார்.

டத்தோஸ்ரீ சரவணனும் அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

தொழிலாளர் மேம்பாட்டுக் கூட்டுறவு கழகத்தின் செயலவை உறுப்பினர்கள், வாரிய உறுப்பினர்கள், ம.இ.கா வின் மூத்த தலைவர்கள், கழகப் பேராளர்கள், ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் அந்தத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விஸ்மா துன் சாமிவேலு கட்டடத்தின் திறப்பு விழா படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: