Home One Line P2 ஆஸ்ட்ரோ : ‘யார் அவன்’ எனும் புதிய உள்ளூர் தமிழ் தொடர்

ஆஸ்ட்ரோ : ‘யார் அவன்’ எனும் புதிய உள்ளூர் தமிழ் தொடர்

571
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் அக்டோபர் 1, இரவு 9 மணி முதல், தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிபரப்பாக ஒளியேறும் “யார் அவன்” எனும் புதிய உள்ளூர் தமிழ் காதல் மற்றும் திரில்லர் தொடரைக் கண்டுக் களிக்கலாம்.

உள்ளூர் திரைப்பட இயக்குனர், ‘வெண்ணிற இரவுகள்’ புகழ் பிரகாஷ் ராஜாராம் கைவண்ணத்தில் மலர்ந்த ‘யார் அவன்’ 21 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இத்தொடரில், பிரசித்திப் பெற்ற உள்ளூர் கலைஞர்களான சூர்ய பிரகாஷ், மூன் நிலா, இர்பான் சய்னி, கிருத்திகா, குபேன் மகாதேவன், எம். எஸ். கார்த்திக், லதா, ஆனந்தா ராஜாராம், கோவிந்த் சிங், புவனன் மற்றும் யவனேஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தத் தொடரின் கதை ஆடை அலங்கார (ஃபேஷன்) துறையை மையமாக கொண்டது. மாடல்களின் வாழ்க்கை முறையையும் சித்தரிக்கிறது. அமர் (சூர்ய பிரகாஷ்) மாயாவுடன் (மூன் நிலா) ஒரு காதல் உறவில் இருக்கையில் தனுஜாவுடன் (கிருத்திகா) நல்ல நண்பராகவும் உள்ளார்.

#TamilSchoolmychoice

மறுபுறம், சஞ்சய் (இர்பான் சய்னி) மாயாவின்பால் காதல் வயப்படுகிறார். ஒரு நாள், அமர் இறக்கிறார். அதிக போதைப்பொருள் உட்கொண்ட காரணத்தினால் அவர் இறந்துவிட்டதாக அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்படுகிறது.

அறிக்கையின் முடிவுகளினால் அதிருப்தி அடைந்த அமரின் நண்பர்கள் இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் ஜித்தானை (குபேன் மகாதேவன்) அணுகுகின்றனர். அமரைப் பற்றிய உண்மையைக் கண்டறியும் முயற்சியில் அவர் மற்றொரு உடலின் ஆவியை கையாளுகிறார்.

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் அக்டோபர் முழுவதும் யார் அவன் தொடரின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டு களிப்பதோடு எப்போதும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.