Home One Line P2 மின்னும் நட்சத்திரம் 2020 இறுதிச் சுற்று அக்டோபர் 3 நடைபெறுகிறது

மின்னும் நட்சத்திரம் 2020 இறுதிச் சுற்று அக்டோபர் 3 நடைபெறுகிறது

856
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மின்னல் பண்பலையின் மின்னும் நட்சத்திரம் 2020 பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்று நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டபோது 500- க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தமிழ் மற்றும் தேசிய மொழியில் பாடி தங்களுடைய காணொளிகளை #minnalstar2020 என பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியிருந்தனர்.

500- க்கு மேற்பட்ட போட்டியாளர்களுடன் தொடங்கிய முதல் கட்டம் த‌ற்போது இறுதிச் சுற்றை அடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

மின்னலின் மின்னும் நட்சத்திரம் பட்டத்தை வெல்ல நடக்கும் இசையுத்தத்தில், இறுதிச் சுற்று மேடைக்கு தகுதி பெற்ற எட்டு போட்டியாளர்களில் மூவர் ஆண்கள், ஐவர் பெண்கள்.

பாடும் திறனை வளர்க்கும் முயற்சியில் மின்னல் பன்பலை இந்த போட்டியினை ஏற்பாடு செய்துள்ளது. நாளை அக்டோபர் 3- ஆம் தேதி இரவு 9 மணிக்கு அங்காசாபுரியில் உள்ள பெர்டானா அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு பிரமுகராக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா கலந்து கொள்கிறார்.