கோலாலம்பூர்: இன்று நாட்டில் 287 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
தொற்றுநோய் பாதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான தொற்றுநோய்கள் இன்று பதிவாகியுள்ளன.
கெடாவில் அதிகமாக, அதாவது, 129 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. சபாவில் 113 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இது மலேசியாவில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையை 11771- ஆகக் கொண்டு வந்துள்ளது.
இன்று 81 பேர் குணமடைந்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று நோயிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,095-ஆக உயர்ந்தது.
இன்னும் 1,540 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 22 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.
மரணம் எண்ணிக்கை தொடர்ந்து 136-ஆக உள்ளது.