Home One Line P2 டிரம்ப் மருத்துவமனையிலிருந்து வெளியேறி மக்களைச் சந்தித்தார்

டிரம்ப் மருத்துவமனையிலிருந்து வெளியேறி மக்களைச் சந்தித்தார்

662
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறுகிய நேரம், தாம் கொவிட்19 தொற்றுக் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறி, தனது ஆதரவாளர்களைச் சந்தித்தார்.

தாம் வெளியில் வருவதாக டிரம்ப் டுவிட்டரில் பதிவு செய்த பின்னர், ஒரு முகக்கவசத்தை அணிந்த டொனால்டு டிரம்ப் மருத்துவ மையத்தின் முன் வாகன ஊர்வலத்தில், ஒரு கருப்பு எஸ்யூவியின் பின் இருக்கையில் இருந்து மக்களைப் பார்த்து கை அசைந்தார். அங்கு கூடியிருந்தவர்கள், டிரம்பை வாழ்த்தி அமெரிக்க கொடியை அசைத்து, “யுஎஸ்ஏ, யூஎஸ்ஏ” என்று ஆரவாரமிட்டனர்.

“கொவிட்19 பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று டிரம்ப் மருத்துவமனையிலிருந்து சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட ஒரு காணொலியில் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, அதிபரின் மருத்துவ குழு அவரது ஆக்ஸிஜன் அளவு சமீபத்திய நாட்களில் திடீரென இரண்டு முறை குறைந்துவிட்டது என்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், திங்கட்கிழமை முற்பகுதியில் அவரை விடுவிக்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

டிரம்ப் திங்கட்கிழமை முற்பகல் வெள்ளை மாளிகைக்கு திரும்பலாம், அங்கு அவரது சிகிச்சை தொடரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆயினும், டிரம்பின் இந்த செய்கை மற்றவர்களுக்கு பாதகமாக அமையலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.