Home One Line P2 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரலுக்கு ஒத்திவைப்பு

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் அடுத்தாண்டு ஏப்ரலுக்கு ஒத்திவைப்பு

672
0
SHARE
Ad

ஹாலிவுட்: மெட்ரோ-கோல்ட்வின்-மேயரின் (எம்ஜிஎம்) ஜேம்ஸ் பாண்ட் படமான ‘ நோ டைம் டூ டை’, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொவிட்19 தொற்றுநோயால் திரைப்பட நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மோசமான பொருளாதாரத்தின் விளைவாக இந்த ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

டேனியல் கிரெய்க் நடித்துள்ள ‘நோ டைம் டூ டை’, இப்போது ஏப்ரல் 2- ஆம் தேதி வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறியது.

முதலில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, நவம்பர் 20- ஆம் தேதிக்கு படம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது மீண்டும் அடுத்த ஆண்டுக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இந்த தொற்றுநோயானது திரையரங்குகளை மூடுவதற்கு கட்டாயப்படுத்தியது.

#TamilSchoolmychoice

“இந்த தாமதம் எங்கள் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், இப்போது அடுத்த ஆண்டு ‘நோ டைம் டூ டை’ வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்று எம்ஜிஎம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 காரணமாக வெளியிடப்படாத பெரிய திரைப்படங்களின் பட்டியல் ஹாலிவுட்டில் அதிகரித்து வருகிறது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் வெளியான ஒரே பெரிய படம், வார்னர் பிரதர்சின் ‘டெனெட்’.

சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் உருவான பாண்ட் படம், இப்போது 2021- ஆம் ஆண்டில் மற்ற பெரிய திரைப்படங்களுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.