Home One Line P1 கொவிட்19 குறித்து அரசு உண்மையைக் கூற வேண்டும்- அன்வார்

கொவிட்19 குறித்து அரசு உண்மையைக் கூற வேண்டும்- அன்வார்

628
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றைக் கையாள்வதில் அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.

குறிப்பாக அரசியல்வாதிகள், உயர்மட்ட அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில் அரசு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை யாரும் மீறாமல் இருந்திருக்க வேண்டும் என்றும், விதிகள் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படாமல், அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“எந்தவொரு ஊகங்களையும், வதந்திகளையும் தவிர்ப்பதற்காக தொற்றுநோயின் சமீபத்திய அலைகளை கையாள்வதில் தகவல்களை வழங்குமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.

“இரு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் நெருக்கடியின் போது மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். “என்று அவர் கூறினார்.

இதுவரை, மத அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி முகமட் உட்பட பல அரசியல்வாதிகள் கொவிட்19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர் சுல்கிப்ளியைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினும் 14 நாட்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளானார்.