கோலாலம்பூர்: கோவிட்19 தொற்று குறித்த தற்போதைய நிலைமையை பிரதமர் மொகிதின் யாசின் இன்று மாலை ஆறு மணிக்கு சிறப்பு நேரலையில் பேச உள்ளார்.
இந்த சிறப்பு நேரலை முகநூல் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்.
இந்த விவகாரம் அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு தொடர்பாக பிரதமர் ஏதேனும் குறிப்பிடத்தக்க அறிவிப்புகளை வெளியிடுவாரா என்று அந்த அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
தற்போது, மலேசியா டிசம்பர் 31 வரை மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உள்ளது.
கடந்த மாதத்திலிருந்து கொவிட்19 சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த நிலையில், நேற்று 432 சம்பவங்களைப் பதிவு செய்ததது.