Home One Line P1 சயாம் மரண இரயில்வே கருத்தரங்கம் – சித்தியவானில் நடைபெறுகிறது

சயாம் மரண இரயில்வே கருத்தரங்கம் – சித்தியவானில் நடைபெறுகிறது

775
0
SHARE
Ad

சித்தியவான் (பேராக்) : மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் மறக்க முடியாத அத்தியாயமாக பதிந்துவிட்டது சயாம் மரண இரயில்வே. அதில் பலியானவர்களையும், பாதிப்படைந்தவர்களையும் நினைவுகூரும் வண்ணம் கருத்தரங்கம் ஒன்று பேராக் மாநிலத்தின் சித்தியவான் நகரில் நடைபெறுகிறது.

எதிர்வரும் சனிக்கிழமை அக்டோபர் 10-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சித்தியவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கொவிட்-19 நடைமுறைகளுக்கேற்ப நடைபெறுகிறது இந்தக் கருத்தரங்கம்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சி தொடர்பான கூடுதல் விவரங்களைப் பெற, மேலே காணப்படும் செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இந்த நிகழ்ச்சி தொடர்பான விவரங்களை திரு சந்திரசேகரனைக் கீழ்க்காணும் செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம்:

செல்பேசி எண் : 017-8887221