கோலாலம்பூர்: கொவிட்19 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு காவல் துறை இப்போது அபராதங்கள் வழங்க முடியும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார்.
காவல் துறை அதிகாரிகளான இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளைக் கொண்டோர் இதனை வழங்க அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
“காவல் துறையினருக்கு இந்த நடைமுறையை எளிதாக்குவதற்கு, சட்டத்துறை அலுவலகம், அந்த இடத்திலேயே அபராதங்களை வழங்க அனுமதிக்க ஒப்புக் கொண்டுள்ளது” என்று இஸ்மாயில் கூறினார்.
இன்று முதல் அபராதங்கள் அந்த இடத்திலேயே வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, அபராதம் விதிப்பதற்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறுபவர்களை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு காவல் துறையினர் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்.