Home One Line P2 சசிகலாவின் 2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

சசிகலாவின் 2,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்

510
0
SHARE
Ad

சென்னை: சசிகலாவின் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவினர் நேற்று புதன்கிழமை முடக்கி உள்ளனர்.

சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவரலாம் என்று தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், அவருக்கு சொந்தமான சொத்துக்களை வருமான வரித் துறை முடக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

2017- ஆம் ஆண்டு வருமான வரித் துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர்.

#TamilSchoolmychoice

சிறுதாவூர் சொகுசு வீடு மற்றும் கொடநாடு தோட்ட சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முடக்கியுள்ளனர்.

கடந்த மாதம், சசிகலாவுக்காக சொந்தமான போயஸ் கார்டன் வேதா நிலையத்துக்கு எதிராக கட்டப்பட்டு வரும் சொகுசு வீடும், 64 சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலானவை.