ஈப்போ பாலர் பள்ளி ஆசிரியரான, இந்திரா காந்தியுடன் இங்காட் அமைப்பு உறுப்பினர்களும் இணைவார்கள்.
புத்ராஜெயா செல்லும் வழியில் மாமன்னருக்கு மனு ஒன்றை வழங்குவதாக இங்காட் தலைவர் அருண் துரைசாமி தெரிவித்துள்ளார். இந்த நடைப்பயணம் குறித்து நாளை கூடுதல் தகவல்கள் அளிப்பதாக அருண் கூறினார்.
“இங்காட் அமைப்பும், இந்திராவும் மக்கள், பிரதமரிடம் நீதி கோருகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
“12 நாட்கள், 350 கி.மீ. நடைப்பயணம். நீதியைக் கோரி கடிதத்தை வழங்க வடக்கிலிருந்து புத்ராஜெயாவுக்குச் செல்கிறது. ” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்திராவின் மகள் பிரசன்னா டிக்சாவை அவரது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா 2009- இல் இஸ்லாமிற்கு மாற்றி அழைத்துச் சென்றார். பிரசன்னா அப்போது 11 மாத வயதுக் குழந்தை.
பிரசன்னா டிட்சாவை இந்திராவிடம் திருப்பித் தருமாறு நீதிமன்றங்கள் ரிட்சுவானுக்கு உத்தரவிட்டிருந்தன. ஆனால், அவர் காணப்படவில்லை. அவர்கள் வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது.
ரிட்சுவான் மற்றும் பிரசன்னாவை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக கடந்த மாதம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்திருந்தார்.