கோலாலம்பூர்: சபா தேர்தலில் வெற்றி பெற்றால், விரைவில் ஒரு பொதுத் தேர்தலை நடத்துவேன் என்ற பிரதமர் மொகிதின் யாசின் அறிக்கையை டாக்டர் மகாதீர் முகமட் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது வாக்குறுதிகளை மொகிதின் நிறைவேற்ற வேண்டும் என்றும், அதன் பின் வரும் விளைவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இன்று தனது வலைப்பதிவில் மகாதீர் கூறினார்.
“வாக்குறுதியை மீறாதீர்கள், தேர்தலை நடத்துங்கள், நூறாயிரக்கணக்கானோர் பாதிக்கப்படட்டும் (கொவிட் 19). அதிகமான மக்கள் இறக்கட்டும்.
“கொள்கைகளை விட அரசியல் முக்கியமானது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 18 அன்று சபா தேர்தலின் பிரச்சாரத்தின் போது மொகிதின் இந்த கூற்றினை வெளியிட்டார்.
சபா தேர்தல் மலேசியாவில் கொவிட்19 பரவுவதை அதிகரித்ததாகக் கருதப்படுகிறது.
மாநிலப் பிரச்சாரத்தில் பங்கேற்ற பல அரசியல்வாதிகள் ஏற்கனவே தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.