Home One Line P1 சபாவில் வென்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும்- மொகிதின்

சபாவில் வென்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும்- மொகிதின்

610
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ் கூட்டணி இந்த முறை சபா தேர்தலில் வெற்றி பெற்றால், பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறியுள்ளார்.

மொகிதின் பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று கூறுவதும், அது குறித்து பிரதமர் கருத்து வெளியிடுவதும் இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர் தேசிய கூட்டணி மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள் தேர்தல் நாளை நடைபெறும் என்பது போல் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

#TamilSchoolmychoice

இக்காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் தாக்கி பேசுவதை நிறுத்த வேண்டும் என்றும்  அவர் கூறியிருந்தார்.

தேசிய கூட்டணியில் உள்ள கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அவர் கூறினார். இது 15-வது பொதுத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்வதற்கான ஒரே வழியாகும் என்று அவர் தெரிவித்தார்.

“எனவே, நாம் ஒன்று சேர்ந்து, மக்கள் நமக்கு ஆதரவளிப்பதை உறுதி செய்வதற்காக ஒருமைப்பாட்டுடன் நெருக்கமாக பணியாற்றுவோம்,” என்று அண்மையில் பெர்சாத்து கட்சியின் நான்காவது ஆண்டு விழாவின் கொண்டாட்டத்தில் அவர் உரையாற்றினார்.

15-வது பொதுத் தேர்தல் எப்போது நடைபெறும் என்று கேட்க வேண்டாம் என்று மொகிதின் உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தியிருந்தார்.

“முக்கியமானது என்னவென்றால், நாளை நடைபெறுவது போல் நாம் கடினமாக உழைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

தனது நிர்வாகத்தை பெர்சாத்து அல்லாத உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று மொகிதின் கூறினார். நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு வருவது என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று குறிப்பிட்டிருந்தார்.

“நாங்கள் சபாவில் வென்றால், விரைவில் தேர்தலை நடத்துவோம். ஊடகங்கள் என்ன எழுதுவார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால், அவர்கள் ஊகிக்கட்டும்.

“சபா மாநிலத் தேர்தல் மிக முக்கியமானது.

“நாங்கள் தேசிய கூட்டணியை ஆதரிக்கிறோம், மொகிதினைத் தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மலேசியா தொடர்ந்து முன்னேறி வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், வெற்றி பெறுவதற்கான ஒரே வழி என்னுடன் உள்ளது என்று சபா மக்கள் கருத வேண்டும்” என்று அவர் ஓர் உரையில் இன்று கூறினார்.