Home One Line P1 கொவிட்19: புதிதாக 91 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்

கொவிட்19: புதிதாக 91 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்

680
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்றைய நிலவரப்படி, நாட்டில் 95 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 91 உள்ளூர் நோய்த்தொற்றுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட 4 சம்பவங்கள் ஆகியவை அடங்கும்.

புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 10,147 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

14 பேர் இன்று சிகிச்சை குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

#TamilSchoolmychoice

இதுவரையில் மொத்தமாக 9,264 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 754 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.

உள்நாட்டில் பீடிக்கப்பட்ட 91 சம்பவங்களில் 90 சம்பவங்கள்  சபாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒருவர் நெகிரி செம்பிலானில் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களில், 23 பேர் வெளிநாட்டினர்.

ஒருவர் இன்று சபாவில் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 129-ஆக உயர்ந்துள்ளது.