Home One Line P1 குடிபோதையில் வாகனம் செலுத்துதல்: முதல் முறையானாலும் நேரடியாக சிறைத் தண்டனை

குடிபோதையில் வாகனம் செலுத்துதல்: முதல் முறையானாலும் நேரடியாக சிறைத் தண்டனை

662
0
SHARE
Ad

கோலாலம்பூர்: திருத்தப்பட்ட சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு கடுமையான அபராதம் விதிக்க எந்தவொரு காலத் தாமதமும் இருக்காது என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் இன்று தெரிவித்தார்.

இது அடுத்த வாரம் மேலவையில் தாக்கல் செய்யப்படும்.

“பொதுமக்களை எச்சரிக்கவும், அறிவுறுத்தவும் எங்களுக்கு போதுமான நேரம் இருந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் செனட்டில் ஒப்புதல் பெற்றவுடன், இப்புதிய சட்டத்தை தாமதப்படுத்த விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.”

அபராதம் மற்றும் சிறைத்தண்டனை உள்ளிட்ட கடுமையான அபராதங்கள் மக்களை குற்றம் செய்வதிலிருந்து தடுக்க போதுமானதாக இருக்கும் என்று வீ கூறினார்.

இந்த சட்டம் மது அருந்த விரும்பும் நபர்களின் உரிமைகளை பறிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றாரவர்.

“நீங்கள் குடிக்கலாம். ஆனால் நீங்கள் குடித்தவுடன், வாகனம் ஓட்ட வேண்டாம் ” என்று அவர் கூறினார்.

இலஞ்சம் கொடுத்து தண்டனையிலிருந்து தப்பிப்பதை அவர் எச்சரித்தார். குற்றவாளிகள் எனக் கருதப்படுபவர்களுக்கு இரட்டை தண்டனைகள்  வழங்கப்படும்.

“சட்ட அமலாக்கம் இதை சமாளிக்கட்டும். இதிலிருந்து மக்கள் தப்பிக்க முயன்றால், அவர்களுக்கு இரண்டு தண்டனைகள் காத்திருக்கும், ” என்று அவர் கூறினார்.

மக்களவை சமீபத்தில் சாலை போக்குவரத்து (திருத்த) மசோதா 2020- ஐ நிறைவேற்றியது. இது மது அல்லது போதைப்பொருள் தாக்கத்தின் கீழ் வாகனம் ஓட்டுபவர்களுக்கும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதற்கும் அபராதத்தை அதிகரித்தது.

வாகனம் ஓட்டும்போது மரணத்தை ஏற்படுத்தியவர்கள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள். மேலும், அவர்களுக்கு 50,000 முதல் 100,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படும்.

முதல் முறை குற்றவாளிகளுக்கான குறைந்தபட்ச அபராதம் 5,000 இலிருந்து 20,000 ரிங்கிட்டாகவும், அதிகபட்ச அபராதம் 20,000 இலிருந்து 50,000 ரிங்கிட்டாகவும் உயர்த்தப்படும்.

முதல் முறை குற்றவாளிகள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். அதிகபட்ச சிறைத் தண்டனை 10 ஆண்டுகள் ஆகும்.

முதல் முறை குற்றவாளிகள் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அடுத்தடுத்த குற்றங்களுக்கு, அபராதம் 10 ஆண்டுகளாக இரட்டிப்பாகும்.