தாம் நிறுவிய பெஜுவாங் கட்சி எந்தவொரு கட்சியுடனும், தனிநபருடனும் எந்த தொடர்பில் இல்லை என்று சமூக ஊடகம் மூலம் வழங்கப்பட்ட ஒரு சிறப்பு செய்தியில் மகாதீர் கூறினார்.
“பிரதமராக விரும்பும் வேட்பாளர் ஒருவரை நான் ஆதரித்ததாகக் கூறப்பட்டது.
“நான் பிரதமர் வேட்பாளராக யாரையும் ஆதரிக்கவில்லை என்று கூற விரும்புகிறேன்.
“நான் எனது புதிய கட்சியில் இருக்கிறேன். பெஜுவாங், இந்த கட்சி சுயேச்சையானது. எந்தவொரு கட்சியுடனும் அல்லது ஒரு பதவியைப் பெறுவதற்கான இலட்சியங்களைக் கொண்ட எந்தவொரு நபருடனும் எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் கூறினார்.
நேற்று , பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடினை இஸ்தானா நெகாராவில் சந்தித்தார். அச்சந்திப்பில் தமக்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறினார். ஆயினும், அன்வாரின் இந்த கூற்றுக்குப் பிறகு, அன்வார் எண்ணிக்கையை மட்டுமே வெளியிட்டதாகவும், பெயர் பட்டியலை வெளியிடவில்லை என்றும் அரண்மனை தரப்பு கூறியது.