Home One Line P1 பத்து சாபி இடைத்தேர்தல் டிசம்பர் 5-இல் நடைபெறும்- இயங்கலை வாயிலாகப் பிரச்சாரம்!

பத்து சாபி இடைத்தேர்தல் டிசம்பர் 5-இல் நடைபெறும்- இயங்கலை வாயிலாகப் பிரச்சாரம்!

513
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பத்து சாபி இடைத்தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள், கூட்டங்கள் மற்றும் வீடு வீடாக செல்வது போன்ற வழக்கமான முறைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

இடைத்தேர்தலுடன் இணைந்து வேட்பாளர்கள் அல்லது கட்சி ஆதரவாளர்கள் நடந்து சென்று வாக்குகளை சேகரிக்கும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் இனி அனுமதிக்காது என்று அதன் தலைவர் அப்துல் கானி சல்லே தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க வேட்பாளர்கள் இயங்கலை அல்லது சமூக ஊடகங்களில், பிரச்சார சிற்றேடுகளை தபால் மூலமாகவும் விநியோகிக்க முடியும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் 1988 அல்லது சட்டம் 342- க்கு இணங்க தேர்தல்களை நடத்த கொவிட்19 தடுப்பு வழிகாட்டுதலை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

“அடிப்படையில், திறந்த பிரச்சாரம், குழு பிரச்சாரம் மற்றும் வீடு வீடாக பிரச்சாரம் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது. சமூக ஊடகங்கள் மூலம் பொது பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கிறது, ”என்று அவர் கூறினார்.

டிசம்பர் 4, வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணி வரை போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து 12 நாட்கள் வரை பிரச்சார காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அப்துல் கானி கூறினார்.

பத்து சாபி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5- ஆம் தேதி நடைபெறும். நவம்பர் 23- ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல், டிசம்பர் 1- ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பு நாளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.