Home One Line P1 பினாங்கில் தீபாவளி சந்தைக்கு அனுமதி இல்லை!

பினாங்கில் தீபாவளி சந்தைக்கு அனுமதி இல்லை!

632
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: கொவிட்19 தொற்றுநோய் காரணமாக தீபாவளி சந்தைகள் இந்த ஆண்டு நடைபெறாது. ஆனால், பினாங்கு லிட்டில் இந்தியாவில் வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு தற்காலிக நேர நீட்டிப்புகளை ஏற்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு தீபாவளி சந்தைகள் இருக்காது என்று துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி கூறினார்.

“பினாங்கு தீவு நகராட்சி மன்றம் இந்த நீட்டிப்பபை ஒரு சில வரம்புகளுடன் ஒப்புதல் வழங்குகிறது. இது கடைகள் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகின்றன.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களைக் கண்காணிப்பது, ஒவ்வொரு நடைமுறையும் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான பொறுப்பு வணிகர்களிடமே உள்ளது என்று அவர் கூறினார்.

“தீபாவளிக்கு எந்தவொரு பெரிய சந்தையையும் நாங்கள் அனுமதிக்கவில்லை, ஏனெனில் இதுபோன்ற திருவிழாக்களை கண்காணிப்பது கடினம். மேலும், தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கொண்டாட்டம் மிதமான அளவில் இருப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

தீபாவளிக்கு எந்த மாநில அளவிலான திறந்த இல்லமும் இருக்காது என்றும், வரவிருக்கும் நவராத்ரி கொண்டாட்டங்கள் கூட கடுமையான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறை வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் என்றும் இராமசாமி கூறினார்.