புது டில்லி: கொவிட்19 தொற்று பரவலைக் கண்டறியும் இந்தியாவின் ஆரோக்கியா சேது கைபேசி செயலி சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
“இந்தியாவில் ஆரோக்கியா சேது செயலி 15 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். கொவிட்19 பரவலை கண்டறியவும், குறிப்பிட்ட இடங்களில் பரிசோதனையை தீவிரப்படுத்தவும் சுகாதார அதிகாரிகளுக்கு ஆரோக்கிய சேது பெரிதும் உதவியுள்ளது” என்று அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரிஷியஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அரசால் ஆரோக்கிய சேது செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. சமூகத்தில் உள்ள கொவிட்19 அச்சுறுத்தல்கள், பாதிக்கப்பட்ட நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை வழங்குவதற்காக ஆரோக்கிய சேது உருவாக்கப்பட்டது.