கோலாலம்பூர்: நவம்பர் 2- ஆம் தேதி நாடாளுமன்ற அமர்வைக் கூட்டுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அக்டோபர் 30 அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு கொவிட்19 சோதனை நடத்துமாறு மக்களவை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சபாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொவிட்19 சோதனைகள் மற்றும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவை செயலாளர் நிசாம் மைடின் பாட்சா மைடின் தெரிவித்தார்.
தற்போது சபாவில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, கொவிட்19 சோதனைகள் அக்டோபர் 30 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்றத்தின் பிரதான தொகுதியின் கார் நிறுத்தும் இடத்தில் நடத்தப்படும் என்று நிசாம் மைடின் கூறினார்.
மக்களவை அமர்வு நவம்பர் 2 முதல் டிசம்பர் 15 வரை 27 நாட்களுக்கு நடைபெறும். அரசாங்க வரவு செலவுத் திட்டம் நவம்பர் 6- ஆம் தேதி தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.