Home One Line P1 லிம் குவான் எங், முகமட் சாபு – மாமன்னருடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது

லிம் குவான் எங், முகமட் சாபு – மாமன்னருடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது

543
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், பார்ட்டி அமானா நெகாரா கட்சியின் தலைவர் முகமட் சாபு இருவருக்கும் மாமன்னருக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

சந்திப்பு ஒத்தி வைக்கப்படுவதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இதற்கு முன்னர் வெளிவந்த தகவல்களின்படி லிம் குவான் எங் இன்று புதன்கிழமை மாமன்னரைச் சந்திக்கவிருந்தார்.

#TamilSchoolmychoice

முகமட் சாபு எதிர்வரும் அக்டோபர் 22-ஆம் தேதி மாமன்னரைச் சந்திப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாமன்னரின் தனிச் செயலாளர் தங்களை அழைத்து மாமன்னருடனான சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் தகவலைத் தெரிவித்தனர் என குவான் எங், முகமட் சாபு இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.

மாமன்னரின் அறிவுரையைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும், மாமன்னரின் உடல் நலத்திற்காகவும், அவரது குடும்பத்தினரின் நலன்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம் என்றும் அவர்கள் இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.

அக்டோபர் 13-ஆம் தேதியன்று மாமன்னரை அன்வார் இப்ராகிம் சந்தித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைவர்களை மாமன்னர் தனித் தனியாக சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்.

அன்வாரைச் சந்தித்த பின்னர் அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சாவை மாமன்னர் சந்தித்தார். நாளை வியாழக்கிழமை அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியை மாமன்னர் சந்திப்பார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.