Home One Line P2 ‘அமெரிக்காவை எழுந்து நிற்க வைத்த ஒரே அதிபர் நான்தான்’- டிரம்ப்

‘அமெரிக்காவை எழுந்து நிற்க வைத்த ஒரே அதிபர் நான்தான்’- டிரம்ப்

485
0
SHARE
Ad

வாஷிங்டன்: ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில்  வெற்றிப் பெற்றால், சீனா வெற்றி பெற்றதாக அர்த்தம் என்று டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கூறினார்.

அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவை எதிர்கொள்ள தாம் கடுமையான நடவடிக்கை எடுத்ததாக டிரம்பு கூறினார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

“நாம் கொவிட்19 தொற்றை கூடிய விரைவில் கட்டுப்படுத்தி விடுவோம். இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

“சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும். சோசியலிஸ்டுகளுக்கும், மார்க்சிஸ்டுகளுக்கும், இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் அதிகாரத்தை கொடுக்க ஜோ பைடன் விரும்புகிறார்.” என்று டிரம்ப் கூறினார்.