Home One Line P1 கருத்து பரிமாற்றத்திற்காகவே துங்கு ரசாலி மாமன்னரை சந்தித்தார்

கருத்து பரிமாற்றத்திற்காகவே துங்கு ரசாலி மாமன்னரை சந்தித்தார்

547
0
SHARE
Ad

கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினை நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்தானா நெகாராவில் சந்தித்தது மலேசிய அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பட்சத்தில் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து துங்கு ரசாலியிடமிருந்து கருத்துகளைப் பெற அல்-சுல்தான் அப்துல்லாவின் ஒப்புதலுடன் இந்த சந்திப்பு நடந்ததாக துங்கு ரசாலியின் அரசியல் செயலாளர் முகமட் லோக்மான் கானி தெரிவித்தார்.

“நேற்று, மாமன்னர் துங்கு ரசாலிக்கு இஸ்தானா நெகாராவிற்கு வரும்படி உத்தரவிட்டார், பின்னர் அவர் (நேற்று) சந்திப்பை மேற்கொண்டார். இந்த சந்திப்பில் துங்கு ரசாலி கருத்தை தெரிவிக்க மட்டுமே அழைக்கப்பட்டது,”

#TamilSchoolmychoice

“துங்கு ரசாலி அரசியலில் மிகவும் அனுபவம் வாய்ந்த, மிகவும் முதிர்ச்சியுள்ள, நீண்ட காலம் பணியாற்றியவர். மேலும், அனைத்து பிரதமர்களுடன் பணியாற்றிய நபரும் அவரே” என்று அவர் கூறினார்.

83 வயதான தெங்கு ரசாலி, அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவராகவோ அல்லது கட்சியின் பிரதிநிதியாகவோ இந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை. அதற்கும் சந்திப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முகமட் லோக்மான் விளக்கினார்.

புதிய மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு 120- க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அன்வார் இஸ்தானா நெகாராவில் மாமன்னரைச் சந்தித்தப் பிறகு தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று மாமன்னரைச் சந்தித்து அன்வார் இப்ராகிம் தமக்கு கிடைத்துள்ள ஆதரவின் எண்ணிக்கையை மட்டுமே சமர்ப்பித்ததாகவும், ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிடவில்லை என்றும் அரண்மனை தெரிவித்தது.

“எனவே, சுல்தான் அப்துல்லா, அன்வாரை மத்திய அரசியலமைப்பில்  பரிந்துரைக்கப்பட்ட சட்டத்தின் சரியான செயல்முறையை பின்பற்றவும் மதிக்கவும் அறிவுறுத்தினார்,” என்று அது கூறியிருந்தது.