Home One Line P1 மாமன்னரை சாஹிட் ஹாமிடி சந்திப்பது உறுதியானது

மாமன்னரை சாஹிட் ஹாமிடி சந்திப்பது உறுதியானது

477
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அவர்களைச் சந்திப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை வியாழக்கிழமை அக்டோபர் 15-ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு சாஹிட் ஹாமிடி மாமன்னரைச் சந்திப்பார்.

இந்தத் தகவலை அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அன்வார் இப்ராகிம் மாமன்னரைச் சந்தித்ததைத் தொடர்ந்து அடுத்தடுத்து பரபரப்பான அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

அன்வாருடனான சந்திப்பைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மணி நேரத்தில் அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சாவைச் சந்தித்தார் மாமன்னர்.

அக்டோபர் 13-ஆம் தேதி இரவு அம்னோவின் அரசியல் பிரிவு குழுவின் கூட்டம் நடைபெற்றது. தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு அம்னோ பரிசீலிக்கும் என்ற முடிவு அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை அக்டோபர் 14-ஆம் தேதி மாமன்னரைச் சந்திக்கும்போது சாஹிட் ஹாமிடியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.