Home One Line P1 முன்னாள் அரசியல் செயலாளர் மீது 5 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் அரசியல் செயலாளர் மீது 5 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு

455
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் மத்திய அமைச்சரின் அரசியல் செயலாளர் மீது 5 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் தொடர்பாக நாளை வியாழக்கிழமை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.

40 வயதான அந்நபர் நாளை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணைய சட்டப் பிரிவு 16-இன் கீழ் பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

அவர் இதே குற்றத்திற்காக அக்டோபர் 23-ஆம் தேதி ஷா ஆலாமில் பல கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

“ஒரு ஒப்பந்தக்காரர் நிறுவனத்திடம் இருந்து திட்டத்தைப் பெறுவதற்கு தனிநபர் உதவியதாக நம்பப்படுகிறது. மேலும் பல பரிவர்த்தனைகள் மூலம் ஒரு சில நபர்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது ” என்று அவர் கூறினார்.

எம்ஏசிசி விசாரணை இயக்குனர் நோராஸ்லான் முகமட் ரசாலி இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

அதே அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் உள்ள மற்ற மூன்று மூத்த அதிகாரிகள் மீது அதே வழக்கு தொடர்பாக எம்ஏசிசியால் விசாரிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.