Home One Line P2 விஜய்யின் “மாஸ்டர்” படத்தின் மற்றொரு புதிய பாடல் வெளியீடு

விஜய்யின் “மாஸ்டர்” படத்தின் மற்றொரு புதிய பாடல் வெளியீடு

697
0
SHARE
Ad

சென்னை – கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகியிருக்க வேண்டிய படம் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தின் வெளியீடு கொவிட்-19 பிரச்சனையால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் படம் எப்போது வெளிவரும் என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

காரணம், திரையரங்குகள் எப்போது முழுமையாகத் திறக்கப்படும் என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.

எனினும் இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்தப் பாடல்கள் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சமூக ஊடகங்களில் ஈர்த்துள்ளன.

இன்று அக்டோபர் 16, மாஸ்டர் படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் 30-வது பிறந்த நாளாகும். அதை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் புதிய பாடல் காணொலி சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

மதுபோதையிலிருந்து மீளவேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடலாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.

அந்தப் படத்தின் காணொலியை மேற்கண்ட யூடியூப் இணைப்பில் காணலாம்.