Home One Line P2 முதலீட்டாளர்களுக்கான அருமையான களம் இந்தியா – முன்னணி வங்கியாளர் கருத்து

முதலீட்டாளர்களுக்கான அருமையான களம் இந்தியா – முன்னணி வங்கியாளர் கருத்து

586
0
SHARE
Ad

புதுடில்லி : கொவிட்-19 பாதிப்புகளால் உலக நாடுகளின் வணிகச் சூழல்கள் பெரிதும் மாற்றம் கண்டிருக்கின்றன. அதற்கேற்ப வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இப்போதைக்கு அருமையான களம் இந்தியாவாகும் என கோத்தாக் மஹிந்திரா வங்கியின் தலைமை இயக்குநர் உதய் கோத்தாக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக கோத்தாக் மஹிந்திரா வங்கி திகழ்கிறது.

மின்னிலக்கத் துறையிலும் பயனீட்டாளர்களை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களிலும் முதலீடு செய்வது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பொருளாதாரக் கருத்தரங்கு ஒன்றின் வழி உரையாற்றும்போது உதய் கோத்தாக் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

ஏறத்தாழ 500 மில்லியன் இணையப் பயனர்களை இந்தியா கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் காரணமாக இணைய வழி வாணிபம், மின்னிலக்க கட்டணம் செலுத்தும் சேவைகள் போன்ற துறைகளில் ஈடுபட்டு வரும் இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர்.

சீனாவின் ஆரம்ப காலத்தில் மின்னிலக்கத் துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டபோதும் இத்தகைய முதலீடுகள் செய்யப்பட்டன.

கொவிட்-19 காரணமாக மின்னிலக்கத் துறையில் இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி இந்த ஆண்டு மட்டும் தனது ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 20 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்த்தார். அந்நிறுவனத்தின் 33 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் இந்த முதலீட்டை அவரால் பெற முடிந்தது.

இந்த முதலீட்டைச் செய்த நிறுவனங்களில் அமெரிக்காவின் பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களும் அடங்கும்.

முகேஷ் அம்பானியின் வணிக நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் ரிடெயில் வெஞ்சர்ஸ். சில்லறை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனம் இதுவாகும். கடந்த 2 மாதங்களில் 5.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை இந்த நிறுவனம் ஈர்த்துள்ளது.