கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 865 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியிருக்கிறது.
இதில் 858 தொற்றுகள் உள்நாட்டுத் தொற்றுகளாகும். எஞ்சிய 7 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானவையாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 21,363 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
643 தொற்றுகளுடன் அதிக தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சபா இருந்து வருகிறது.
455 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 13,717 ஆக உயர்ந்துள்ளது.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இந்த விவரங்களை வெளியிட்டார்.
மொத்தம் 7,456 பேர் மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 99 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்,32 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று புதிதாக 3 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.