Home One Line P1 மாக்காவ் மோசடியில் கலைஞர்கள், அரசியல்வாதிகள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

மாக்காவ் மோசடியில் கலைஞர்கள், அரசியல்வாதிகள் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

475
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இயங்கலை சூதாட்டக் கும்பல் நடவடிக்கைகள் மற்றும் மக்காவ் மோசடிகளில் கலைஞர்கள், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிந்தால் காவல் துறை விசாரிக்கும்.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

இருப்பினும், அரசியல்வாதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை இதுவரை காவல் துறை கண்டுபிடிக்கவில்லை.

#TamilSchoolmychoice

“நாங்கள் மேலும் விசாரிப்போம், ஏதேனும் இருந்தால், தேவைப்பட்டால் கலைஞர்கள் அல்லது அரசியல்வாதிகள் அழைப்போம்

“குற்றத் தடுப்புச் சட்டம் (போகா) 1959- இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பேரின் கைது தொடர்பாக, தடுப்புக் காவலை 38 நாட்களுக்கு நீட்டிக்க காவல்துறை விண்ணப்பிக்கும்” என்று புக்கிட் அமானில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று செய்யப்பட்டது.