Home One Line P1 தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மாமன்னரைச் சந்தித்தப் பிரதமர்!

தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மாமன்னரைச் சந்தித்தப் பிரதமர்!

568
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுடனான அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பை இன்று பிரதமர் மொகிதின் யாசின் இஸ்தானா நெகாராவில் மேற்கொண்டார்.

இன்றைய அமர்வு காலை 8 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடித்ததாக முகநூல் வழியாக பதிவேற்றிய அறிக்கையில் இஸ்தானா நெகாரா தெரிவித்தது.

“அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பு அல்-சுல்தான் அப்துல்லாவின் வாராந்திர நடவடிக்கைகள் அல்லது முக்கிய வழக்கங்களில் ஒன்றாகும். இது அரசாங்கத்துடன் தொடர்புடைய விஷயங்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் கலந்துரையாடி கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த அறிக்கையுடன், நான்கு புகைப்படங்கள் மொகிதின் யாசின் மாமன்னருடன் இருப்பதும் பதிவேற்றப்பட்டிருந்தது.