பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் வாகனம் காலை 8.57 மணிக்கு பெர்டானா புத்ராவுக்குள் நுழைந்தது. அதைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் வந்தனர்.
பிரதமர் தனது இரண்டாவது தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் நடத்தப்படும் முதல் கூட்டம் இதுவாகும்.
நேற்று புதன்கிழமை, அவர்கள் அனைவரும் இயங்கலை வாயிலாக ஓர் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினர்.
இன்றைய சிறப்புக் கூட்டம் அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்ததாக இருக்கும் என்ற வதந்தியை ஏந்தியுள்ளது.
Comments